Sunday, February 7, 2010

Katparaihalu karaium

கற்பாறைகளும் கரையூம்
அவன் இதனைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சடுதி யாக எல்லாமே நடந்து முடிந்து விட்டிருந்தது. தன்னால் ஏதும் தவறுகள் நடந்து விடாமலிருக்க வேண்டுமே என்பதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டான்.
காரியாலயத்தில் வேலையில் மூழ்கியிருந்த அவன் எதிரே நிழலாடிய நிழவட்டத்தைக் கண்டு எதேச்சையாக தலையூயர்த்திப் பார்த்தான். அவனுக்கு ஆச்சரியமும்இ பயம் கலந்த மரியாதையூம் பீறிட்டு நின்றது. உணர்வூகள் திசை திரும்பி விடாமல் இருப்பதற்கு பெரும் பிரயத்தனப்பட்டான். அவனது உணர்வூகளைக் கண்டு அவரும் திணருவது வெளிப் படையாகத் தெரிந்தது.
"ஸேர்..."
அவனெழுந்த வேகத்தில் சக்கரச் சுழல் கதிரை எகிறி சுற்றுண்டு நின்றது.
அவரும் இதனை எதிர்பார்த்திருக்கவில்லையென்பது முகவோட்டத்தில் பிரதிபலித்தது. கண்கள் ஆச்சரியத்தில் விரிந்து மனதுக்குள்ளால் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பது தெரிந்தது.
"நீங்க..." இவன் தானே தன்னை எப்படி அறிமுகம் செய்துகொள்வது என சிந்திக்கத் தொடங்கிவிட்டான். நெஞ்சு நிமிர்த்தி தன்னை அறிமுகம் செய்துகொள்ள கூச்சம். அது கூச்சமா அல்லது பணிவா...? அறிமுகத்தை எப்படித் தொடங்கி வைப்பது என்பது மற்றப் பிரச்சினை.
"ஸேர்... நான்... நான்..."
மேடைகளில் அணையூடைந்த வெள்ளம்போல் பிரவகித்து வரும் அவனது வார்த்தைகள் கூடத் தடுமாறத் தொடங்கின. கன்னங்கள் பொங்கி கண்கள் சிவந்து அணையூடைந்த வெள்ளம் போல் கண்ணீர் பொல பொலவென... அவரைக் கண்டதிலிருந்து மிகச்சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த உணர்வூகளெல்லாம் மடை திறந்து... அவனுக்கு வெட்கமே தலையெடுத்தது.
கடந்து வந்த இந்நாட்களை நினைக்கும் போது அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போன சந்தர்ப்பங்கள் நிறையவிருந்தன. சொல்லொணா துயரத்துக்குள் துவண்டு போன நாட்கள் அவை. அப்போது இவனுக்கு பத்து வயதுதானிருக்கும். பசுமரத்தாணி போல என்பார்களே... இல்லையில்லை கல்லில் பொறித்த எழுத்துக்கள் போல என்பார்களே, அதுபோல அங்கம் அங்கமாக... துணுக்குத் துணுக்காக ஒள்ளுப்பளமும் விட்டு வைக்காமல் எல்லாமே அவன் ஞாபகத்தில் நர்த்தனமாடுகின்றன. நாரிகளையெல்லாம் புடைத்தெழச்செய்து மெய்ச்சிலிர்க்க வைக்கின்றன.
பத்து வயது மூத்தவனான அவனுக்கு ஒன்பது, ஏழு வயது களில் தம்பிகளிரண்டு. ஐந்து வயதிலும் இரண்டு வயதிலும் குட்டித் தங்கைகளிரண்டு.
இப்போதும் உம்மாவின் வயிறு உப்பிப் பெறுத்து... வயிறு கழன்று விழுந்துவிட அந்தா இந்தாண்டு இருப்பது போல அவனுக்குப்பட்டது. அவனுக்கு மூணு வயது வாக்கில் எப்போதோ ஒரு முறை அவனது உம்மா அவனிடம் கேட்டதாக ஞாபகம்.
"எங்கட தங்க மகனுக்கு தம்பி பபாவொ வேணும்... தங்கச்சி பபாவோ..."
“தன்சி பபா வேணும்... தன்சி பபா வேணும்.. " அவன் ஒன்றுக்குப் பலதடவை நினைவூ வரும் போதெல்லாம் தன்சி பபாவைப் பற்றிய நினைவிலேயே மிதந்தான்.
" எங்கட உம்மா தன்சி பபாவொன்டு கூட்டிக்கொணுவரப்போர..." தாய் வெட்கப்படும்படியாக எல்லோரிடமும் உளறிக் கொட்டியிருக்கிறான்.
“உம்மா உம்மா தன்சி பபாவ எப்பக்கன் கூட்டி வார.." மழலை மொழியில் அவன் கேட்கும் போதெல்லாம் உம்மாவின் வதனம் சிவந்துவிடும். முகம் சந்தோசப் பிரகாசத்தில் விரியூம். அவ்வேளைகளில் எல்லாம் அவனுக்கு அஸர் மல்லிகைப் பூவின் அழகு தான் நினைவூக்கு வரும்;.
மஞ்சள், சிவப்பு, ரோஸ், வெள்ளைக் கலரில் தனித்தனியான மரங்களில் பூத்துச் சிரிக்கும் போது கொள்ளை அழகு. அவன் காண அந்தி நேரத்தில் விரியூம் பூ அதுதான்.
கொஞ்ச காலம்தான், தொட்டால் வாடியின் பூவூம் இலைகளும் போல் அவனது உம்மாவின் முகம் திடீரென்று சோர்ந்து, சிரிப்பே காணக்கிடைக்காத உம்மாவை எதிர்கொள்ள நேர்ந்த போது அவனும் ஸெளதமாகிவிட்டான். அவனது வாழ்வில் கைவீசி கைவீசி கும்மாளம் அடித்துக் கொண்டு பாடசாலைக்குப் போன இனிய நாட்கள் திடீரென்று மறைந்து போயின. வீட்டுக்குள் ஒரே புறுபுறுப்பு... உம்மாவின் சத்தம் மெதுமெது வாக ஆரம்பித்து படிப்படியாக அதிகரித்து உரக்கும். வாப்பாவின் சத்தம் வேறு ஓங்கி ஒலிக்கும்...
'உம்மா ஏன் இப்பிடி கரமாகப் பேசிய...வாப்போம் உம்மக்கு ஒரம்கரமாக ஏசியே.." இப்படியூம் சிலவேளைகளில் அவன் யோசித்ததுண்டு. உம்மாவின் விசும்பல் அவனை அதிர வைக்கும். ஒருநாள் அவனது தலையில் வட்டிசை ஏறியது.
“ஆப்ப... மணிப்புட்டு... வடவட வடே வட..." ஊரில் ஒரு சுற்றுச் சுற்றி விற்றுத் தீர்த்து வர அரவூசிரு போய்விடும். ஆரம்பத்தில் விளையாட்டாகத் தொடங்கி... போகப் போக சுமையூடன் வெட்கமும் பிடுங்கித் தின்றது. வீட்டில் கள்ளக் கடயப்பத்தை ஆசைதீர தின்று களிக்க வேண்டிய காலத்தில் அவற்றை சுமந்து திரிந்தான். என்னதான் செய்தாலும் ஏழரைக்கு பாடசாலையில் நின்றாகவூம் வேண்டும். ஒரு சுற்றுச் சுற்றிப் பறப்பான். என்னதான் ஓடினாலும் பாடசாலையை நெருங்கும் போது முதலாம் பாடம் தொடங்கியிருக்கும். அவனது கண்களில் ஸைது மாஸ்டரின் உருவம் நிழலாடும். ஸ்கூல் பெல் அவனுக்காகத்தான் இரங்கி அழுகிறதா... ? காலைக்கூட்டம் முடிந்து முதலாம் பாடத்துக்கும் பெல் அடிபட அவன் உள்ளுக்குத் தலை நீட்டுவான்.
“எடேய் ஸ்கூலுக்கு நேரத்தோடே வரத்தெரியவோ... அசெம்பிளியூம் முடிஞ்சி... போ.. போ.. பெய்த்து கள்ளக் கடயப்பம் வில்லு.."
இரண்டு, மூன்று என கையில் விழும்போது ரத்தமாக சிவந்திருக்கும். ஸைது மாஸ்டரும் பெரும்பாலும் அவனோடே தான் பாடசாலை வளவூக்குள் உள் நுழைவார்.
'லேட்டாக வந்தா அடிகிடைக்குமென்றா ஸைது மாஸ்டரை மட்டும் பிரின்ஸிபல் ஏன் அடிப்பதில்லை...'
அப்போதுதான் அவனை அந்தக் கேள்வி குடைந்தெடுக்கும்.
‘ஏத்துக்கன் நான் பொறந்த.. ஏன்டல்லாவே ஏத்துக்குப் பொறந்தன்..'
மனம் ஒருவிதமாக வெருட்டும். மனமும் முகமும் விகாரமடைந்து நிற்பான்;;;;;. ‘ஸொபஹு’ நாலரையோடு அவன் எழுந்தாக வேண்டும். இமாம் ஜெமாத்தோடு தொழுதுவிட்டு வருபவர்களுக்கு லெவறியா விற்பான். ஆரம்பத்தில் அவனோடு கூடவே வாப்பாவூம் இருந்தார். பின்னாட்களில் அவன் மட்டுமே தனியனாகி...
“இந்த பௌலுமுல்லயெல்லம் எனேத் திரியேலா... ஸ்கூலுக்குச் சொணங்கிப் பெய்த்து படுகிய பஸியத்தும் அதாபும் எனக்கெலியன் தெரிஞ்ச..."
“நீ சும்மிரீடா... அந்தக் காலத்துல நாங்களும் இப்பிடித்தான். உம்மா சுட்டுத்தார கள்ளக் கடயப்பத்த வித்துட்டுத்தான் ஸ்கூலு க்குப் போற..."
‘ச்சீ... இந்த வாப்பவொன்டு ஈவிறக்கமென்ட ஜாயேயில்ல... '
அவனது மனம் அலுத்துக் கொள்ளும். அவருக்கெங்கே அவனது துன்பம் விளங்கப் போகிறது. எப்போதோ வெள்ளையாக இருந்த கமிசை மஞ்சள் மசேளென்று... முடு நாத்தமடிக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் செம்பட்டைத் தலையில் தடவி... இடுப்புக்குக் கீழ் தொங்கும் களிசானை இழுத்துக் கட்டி ஆயக்கட்டு ஒண்டை குத்திஇ றப்பர் செருப்புடன் சொப்பின் பேக்கில் புத்தகமும் கையூமாக அவன் ஆஜரானால் யாருக்குத்தான் அவனை பிடிக்கும்... ஸைது மாஸ்டருக்கு அவனைக் கண்டாலே போதும்... இனிக் கேட்கத் தேவையேயில்லை... கையூம் காலும் முதுகும் பாளம் பாளமாக பிளந்து சிவந்து கனன்று... அந்த கிராமப்புறப் பாடசாலையில் அவனது வகுப்பிலேயே அவனது கோலத்தில் அவனைத் தவிர வேறு நான்கைந்து பேரும் இருக்கவே செய்தனர். கோலம் எப்படிப் போனாலும் படிப்பில் சுட்டியாக நின்றான். அதனாலோ என்னவோ எல்லோரை விடவூம் அவன் தான் அவரது பிரதான இலக்கு... அவன் போய்ச் சேர்ந்து பல நிமிடங்கள் கழிந்துதான் றஸீன் ஹாஜியாரின் மகன் 'ஹாலாறி' வந்து சேர்வான்.
“ஆ... றய்ஸ் வாங்கொ... சா.. இன்டக்கு மன்மதக் குஞ்சு மய்ரி..."சிரித்துக் கொஞ்சி பலத்த வரவேற்பு வேறு கிடைக்கும்.
“ஓனோப் பொறகு எத்துனாக்கள் வந்தாலும் இட்டத்துக்கே ஒனக்கு மட்டும் தான் அடி... ஒனுங்குட இவ்ளோ கோவம் எனம்பன்டா"
தீன் பச்சாதாபத்துடன் கேட்பான். அவ்வேளைகளில் தான் மீண்டும் மீண்டும் அவனுக்குள் அந்தக் கேள்வி கிளர்ந்தெழும்.
'நான் ஏத்துக்குப் பொறந்தான்... எடைலே மௌத்தாப் பெய்த்தீந்தா எவ்ளோ நல்லமன்... ச்சீ... இந்த அதாபெல்லம் எனக்கு மட்டுமே... அவனது தலை வெடிக்குமாப் போல் வலிக்கத் தொடங்கும். அவனுக்கும் இன்னும் தான் பிடிபடவில்லை...
'ஏன் எனக்கு மட்டும் எல்லாம் கொழப்பமாகி...'
எது எப்பிடிப் போனாலும் பரீட்சையில் அவன் முதல் மூன்று பேருக்குள் நிற்பான். பெருமளவூ அவனுக்கு மார்க்ஸ் தராத பாடம் சித்திரம்தான். அடுத்தது விஞ்ஞானம்... அறவே குறைந்து... வகுப்பில் முதலாம் பாடமே விஞ்ஞானம் தான். ஹோர்ம் வேர்க் ஒன்று மட்டுமே இவனை படாத பாடு படுத்தியூள்ளது. ஸ்கூல் விட்டுப் போனவூடன் பள்ளிக் கூடத்துக்கு ஓடவேண்டும். அதுமுடிய உம்மா இடியப்பம் சுடுமட்டும் தம்பி தங்கச்சிகளை மேய்க்க வேண்டும். ஆசைக்கு அவனுக்கு விளையாடக்கூட நேரமிருக்காது.
தப்பித்தவறி ஒரு நாளாவது க்ரவூண்டில் நின்டத வாப்பா கண்டிட்டால்... வாப்பாவை அவன் உள்ளத்தால் சபிக்கும் வேளைகள் அவைதான்... இரவோடு இரவாக ஓடர் தந்த வீடுகளுக்கு இடியப்பப் பார்சல்களை கொடுத்து வரவேண்டிய பொறுப்பு வேறு... இனி ஹோர்ம் வேர்க் ஒரு கனவாகவே வந்து போகும். அடுத்த நாள் ஸேரின் முன்னால் கையை நீட்டிக்கொண்டு ஆட்டம் அசைவின்றி நிற்பான்.
'ஆய்... ஊய்.. ஏன்டும்மோவ்..' எந்தச் சத்தமும் வராது. இனி ஸைது மாஸ்டருக்கு ஜெதுபு ஏறிவிடும். அவரது பெரம்பு துள்ளி விளையாடும். ஷஇட்டயட்டத்துக்கு அடித்துத் தள்ளுவார்.
“எனத்தியன்டா கல்லுக் கட்டி மய்ரி ஒனக்கு பெரம்படியூம் ரேஹிச்சிப் பெய்த்து..." அவரது இயலாமையின் வெளிப்பாடோ அது...
“எடா தறுதலகளுக்கு என்னோரு படிப்பென்டா.. மாட்டு முள்ளு கொத்தப் போங்கொ... மாட்டு முள்ளு..." பொறிந்து தள்ளுவார். இரத்தம் பாரித்து நிற்கும் கைகால்களைக் கண்டு உம்மா அழுவார். அவரது கண்ணீர்த் துளிகள் அதில் வடியூம்போது எரிச்சலை விட ஏதோ ஒரு உந்துதல் அவனுள் பிராவகித்து நிற்கும்.
“என்ன எனத்துக்கனும்மா பெத்துப்போட்ட.. இவ்ளோ புள்ளகள் ஒங்களுக்கு கெடச்சுமென்டீந்தா என்ன பொறந்தொடனே கொண்டுபோடீந்தே உம்மா..."
“ஒன்ட தம்பி தங்கச்சிகளுக்கும் இந்த நெல வரப்படாது மகனே..."
முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொண்டு விம்முவாh;... இது உம்மாவின் வேண்டுதலா... கட்டளையா... எதிர்பார்ப்பா.. அவன் குழம்பிப் போவான். “எனத்தியென்டா மீன்கட நாத்தம்... நீங்களுகள் படிச்செனத்தியன் கிழிச்சப்போற.. பெய்த்து மீன்புடீங்கொ.. ஸைது மாஸ்டரின் வார்த்தைகள் மற்றொரு நாள் அவனை இப்படிச் சுடும்.
“அன்னடா மசான்... ஒனக்கு மட்டுமில்ல எங்களுக்கும் சேத்தித்தான் இந்த பன... எப்பிடிச்சரி நாங்க போக்கடியில ரஸ்தியாது பண்ணியென்டா செரியான சந்தோ~ம் இவருக்கு..]
முஹம்மது தைரியப் படுத்துவான். இத்தனைக்கும் மேலால் அவனை உள்@ர உந்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு சக்தியை பலமாக பின்பற்றிச் சென்றான். ஒருமுறைதான் கேட்டாலும் அவனது மனம் அதனைப் பதிவாக்கிக் கொண்டது. கணிதப்பாடத்தில் உயர்ந்த புள்ளி பெற்றதற்காக அவனுக்கு பாடசாலை மட்டத்தில் பல முறை பரிசு கிடைத்திருக்கிறது. விஞ்ஞானப் பாடத்துக்காகவூம் அவனுக்கு பின்னாட்களில் இந்தப் பரிசு கிடைத்தது. அந்த நாட்களில் ஸைது மாஸ்டருக்குப் பதிலாக ஸ்கூலுக்கு புதிதாக வந்திருந்த வாஹிது ஸேர் விஞ்ஞானப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவனையறியாமலேயே அவன் வழிநடத்தப்பட்டான். அவனுக்கான உரம் ஸைது மாஸ்டரிடமிருந்தே கிட்டிக்கொண்டிருந்தது. இப்போதெல்லாம் அவனுக்கு வழி திறந்து விடப்பட்டிருந்தது. அவனது சக்திக்குட்பட்ட உச்சத்தில் இருந்தான்... அவனுள்ளிருந்து ஆழ்ந்த பெருமூச்சு... “ஸேர் நான் பெரியதோடத்து கடயப்ப பழீல் நானட மகன்... அடையாளம் காணத் துடித்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென்று பிடிபட ஒத்தாசை புரிந்தான்.
“பெரியோத்து கடயப்ப பழீல்ட... ஸைது மாஸ்டரால் நம்ப முடியவில்லை. ஒரு செக்கன் கல்லாய்ச் சமைந்திருந்தார். அடுத்த விநாடி பின்வாங்கி விறுவிறுவென நடக்கத் தொடங்கினார். அவனுக்கும் என்ன செய்துகொள்வதென்று தெரியவில்லை.. வேகமாக முன் சென்று மறித்தான். பொலபொலவென்று வடியூம் கண்ணீரோடு ஸைது மாஸ்டர். “ஸேர்... இதெனத்தியன் ஸேர்... "
“நான் பெரிய தவறு செஞ்சுட்ட மகன்... நான் ஒங்கள ஏசினதெல்லம்தான் இப்ப ஏன்ட புள்ளோளுக்கு பலிச்சீச்சிய... அவங்களுக்கு கல்வி கெடச்சோமில்ல... தொழில் தொறவூமில்ல.. இப்ப காட்டிலயூம் மேட்டிலயூம்... "
ஸைது மாஸ்டர் குலுங்கிக் குலுங்கி அழுதார். “ஒங்கட முன்னால நிச்சியத்துக்கு நான் தகுதீல்ல மகன்... என்ன உடுங்கொ... ஏலுமென்டா என்ன மன்னிச்சிக்கொங்கோ..." அவன் திக்பிரமையடைந்து நிற்க ஸைது மாஸ்டர் வேகமாக நகருகின்றார். “மொனவத ஸேர்.. அவனது உதவியாளர் அவனை ஆசுவாசப்படுத்துகின்றான். ஆசிரியர் நலன் துறையில் பணிப்பாளராக கடமையாற்றும் அவனது உதவியாளனுக்கும் அவனது கதை சாடைமாடையாகத் தெரியூம். “எயாகே பென்ஸன் கன கதாகரன்னய் ஸேர் லங்கட்ட ஆவே...
“வஹாம ஏ பைல் எக ஹரிகஸ்ஸன்ட இப்போது அவனுக்கு என்றுமே இல்லாதவாரான ஒரு சுகம். மனம் நிறைந்து வழிவதான எண்ணம். இனம் புரியாதவொரு பாரம் குறைந்து போன மனநிலை...
'அல்லாவே உனக்கே எல்லாப் புகழும்.
ஷஸேர்ட வெ~யத்த நெறவேற்றி அவர்ட கைலே குடுக்கோணும் அவனது மனம் திட சங்கற்பம் பூண்டது.

No comments:

Post a Comment